
விஜய், அஜித், கமல், என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டும் கட்டம் கட்டி நடித்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆவதற்காக ஆடை குறைப்புக்கு கூட நோ சொல்லுவதில்லை அம்மணி. அந்த வகையில் துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், ஆகிய படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டினார். தற்போது நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் அதிக கவர்ச்சியில் கலக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நயன்தாரா பாணியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கவும் துவங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் கங்கனா ரணாவத் நடித்து வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படமான 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் கன்னட படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.
தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே வெளியுலகிற்கு காட்டி வந்த 'காஜல் அகர்வால்' தற்போது முதல் முறையாக அவருக்குள் ஒளிந்திருந்து மற்றொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட காஜல், 10 கிமீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் தான் கடந்ததாகவும், கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாக இந்த தூரத்தை தான் கடந்திருப்பதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் தூரம் வரை தான் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், இந்த போட்டியில் கலந்து கொள்ள பலர் தனக்கு உந்து சக்தியாக இருந்ததாகவும் தெரிவித்திருப்பவர், அவர்கள் ஒலிம்பிக்கில் சாதனை செய்ய வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.