விஸ்வாசம் பேட்ட படத்திற்கு சிக்கல்..! வசூல் எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு! நீதிமன்றம் அதிரடி..!

Published : Jan 21, 2019, 05:32 PM ISTUpdated : Jan 21, 2019, 05:33 PM IST
விஸ்வாசம் பேட்ட படத்திற்கு சிக்கல்..! வசூல் எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு! நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

மதுரையில் பேட்ட விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு  என  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு  மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்து உள்ளது.  

மதுரையில் பேட்ட விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு  என  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு  மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்து உள்ளது.

மதுரையில் சர்கார் படத்தின் போது நிர்ணயிக்கப்பட்டகட்டணத்திற்கு  அதிகமாக டிக்கெட் விற்பனை செய்ததாக மகேந்திரன் என்பவர்  வழக்கு  தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை அடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்க 2  மாநகராட்சி  ஊழியர்களுக்கு நோடீஸ்  அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை விளக்கம் தராததால்  அவர்களை சஸ்பெண்ட் செய்ய ஆணையிட்டு, மதுரை ஆணையருக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது .



இது தொடர்பாக, மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளில் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புது திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நீதிபதிகளிடம் முறையிட, மதுரை மாவட்டத்தில் திரைப்படம் ஓடும் 22 திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய கல்வித்துறை அலுவலர் ஒருவர், மாநகராட்சி அதிகாரி ஒருவர், வழக்கறிஞர் ஒருவர் ஆகிய மூவரை கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள  திரையரங்குகளில்  ஜனவரி 10ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலா நாட்களில் மட்டும்  இதுவரை விசுவாசம் மற்றும் பேட்ட படத்தின் வசூல் எவ்வளவு என்ன  என்பதை மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கையாக தாக்கல் செய்ய  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து  உள்ளது.

திரையரங்குகளில் தினசரி வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு