‘பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கிறார்கள்’...’இந்தியன் 2’நாயகி காஜல் அகர்வால் பகீர்...

Published : Feb 07, 2019, 04:59 PM IST
‘பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கிறார்கள்’...’இந்தியன் 2’நாயகி காஜல் அகர்வால் பகீர்...

சுருக்கம்

‘சினிமா நடிகைகள் ‘மி டு’ விவகாரத்தில் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் திரைத்துறையில் இருக்கவே செய்கின்றன’ என்று தடாலடியாக உண்மையைப் போட்டு உடைக்கிறார் ‘இந்தியன் 2’ பட நாயகி காஜல் அகர்வால்.


‘சினிமா நடிகைகள் ‘மி டு’ விவகாரத்தில் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் திரைத்துறையில் இருக்கவே செய்கின்றன’ என்று தடாலடியாக உண்மையைப் போட்டு உடைக்கிறார் ‘இந்தியன் 2’ பட நாயகி காஜல் அகர்வால்.

’என்னைப்பார்த்தால் சாதுவான நடிகை போல் தோன்றும். ஆனால் கோபம் வந்தால் பத்ரகாளியாக மாறிவிடுவேன் என்பது என்னிடம் பழகும் அனைவருக்கும் தெரியும் என்பதால் இதுவரை என்னிடம் யாரும் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை’ என்று கூறும் காஜல் மேலும் பேசுகையில்,’‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் பத்ரகாளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன். அப்போதும் கூட என் ஆத்திரம் அடங்கவில்லை.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்கிறார் காஜல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி