
’தடம்’ படத்தில் நான் ஹீரோயின் உதட்டைக் கவ்வி முத்தம் கொடுத்ததாக தொடர்ந்து வந்த செய்திகளால் பயந்து போயிருக்கிறேன். கடிக்கிற அளவுக்கெல்லாம் போகவில்லை. அது சும்மா ஒரு லிப் டு லிப் முத்தக் காட்சிதான்’ என்று சற்றுமுன்னர்தான் அந்த முத்தக் காட்சி முடித்து வந்தவர் போல மூச்சிரைக்கப் பேசுகிறார் அருண் விஜய்.
'தடையறத் தாக்க’, ’மீகாமன்’ படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’தடம்’. அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள். ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க’ என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து அதுவே படமாக உருவாகி இருக்கிறது’ என்றார்.
அடுத்து பேசிய அருண் விஜய்,’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.
நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் இயக்குநர் என்னைக்கேட்காமலே என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் ’இல்லை.அது சும்மா ஒரு லிப் டு லிப் காட்சிதான்’ என்று மறுத்தார்.
அடுத்த இரண்டாவது வாரம் படம் ரிலீஸாகுறப்ப உங்க வண்டவாளம் தெரியத்தான போகுது பாஸ்?...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.