கைதி 2 திரையிட தயாரா ? விருமனை தொடர்ந்து சற்குணத்துடன் கை கோர்க்கும் கார்த்தி...

By Kanmani PFirst Published Nov 10, 2021, 11:30 AM IST
Highlights

முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தை தொடர்ந்து சற்குணத்தின் புதிய படைப்பில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியார்  மற்றும் விவேகானந்த பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருந்த கைதியை அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே  வரும் 19-ம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் கைதி வெளியாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் படங்கள் மற்றும் பாகுபலி போன்ற சில இந்திய படங்கள் மட்டுமே ஜப்பானிய மொழியில் வெளியான நிலையில் தற்போது கார்த்தி நடித்த கைதி படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதி பட ரிலீஸின் போதே இரண்டாம் கட்டம் குறித்த பேச்சு அடிபட்டிருந்தது.  கைதி 2 வுக்கான பெரும்பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டால் போதுமானது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே  லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பஷில், சிவனை நாராயணன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

அதேபோல நடிகர் கார்த்திக்கும் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்தது வருகிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ள இந்த படம் சூர்யாவின்  2டி நிறுவன தயாரிப்பில் உருவாகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை வடிவம் கொடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி வக்கீல் திரையனும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் சற்குணத்துடன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.  சற்குணம் தற்போது அதர்வா கபடி வீரராக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு பட்டத்து அரசன் என்னும் தலைப்பை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கார்த்தியை இயக்க சற்குணம் தயாராகி விட்டுள்ளதாக சொல்லபப்டுகிறது. இந்நிலையில் விருமனை தொடர்ந்து இரண்டு வருடம் கடந்து விட்ட கைதியின் இரண்டாம் பக்கத்தில் கார்த்தி நடிப்பாரா? அல்லது சற்குணத்துடன் இணைவாரா?  என்கிற கேள்வி எழுந்துள்ளது. வருடங்கள் கடந்தும் வெற்றியை ஈட்டி வரும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

click me!