KadaisiVivasayiTrailer | 'கடைசி விவசாயி' சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட இசையமைப்பாளர்!!

By Kanmani PFirst Published Nov 20, 2021, 5:05 PM IST
Highlights

'கடைசி விவசாயி' படத்தின்  டிரெய்லர் நாளை (நவம்பர் -21 ) வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு ஏழை சிறுவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் பிரதிபலித்த படம் காக்கா முட்டை. சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ், மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடித்திருந்தனர். வுண்டர்பார் பிலிம்ஸ் கிராஸ் ரூட் திரைப்பட நிறுவன தயாரித்த இந்த  திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் மணிகண்டன். இதை தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். காக்கா முட்டை அளவிற்கு மற்ற படங்கள் இவருக்கு காய் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். 

ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள மணிகண்டன், கடைசி விவசாயி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்து வந்தார் பின்னர் சில காரணங்களால் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரதேசி கோலத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த படத்திற்கான பிண்ணனி வேலைகள் நடைபெற்ற வந்த நிலையில் இதன் பிரிண்ட் செக் பணிகள் முடிந்துள்ளதாக இயக்குனர் மணி கண்டான் நேற்று அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்தப் படத்தின் விநியோக உரிமைக்காக, நீண்ட மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.  பின்னர் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகவும்  தகவல் பரவியது.

'கடைசி விவசாயி' படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரெய்லர் நாளை (நவம்பர் -21 ) வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

is one of the best movies I have ever watched. So honoured to compose alongside the legendary and work with dear and the master . I have so so much to say about this masterpiece 💝. pic.twitter.com/I6lLD6y0QL

 

click me!