இப்போ இல்ல.. எப்பையும் தமிழ்நாட்ட ஆட்சி பண்றது அவன் தான் - பரபரக்கும் வசனங்களுடன் ரிலீசான கடைசிவிவசாயி Trailer

manimegalai a   | Asianet News
Published : Nov 21, 2021, 07:06 PM IST
இப்போ இல்ல.. எப்பையும் தமிழ்நாட்ட ஆட்சி பண்றது அவன் தான் - பரபரக்கும் வசனங்களுடன் ரிலீசான கடைசிவிவசாயி Trailer

சுருக்கம்

விவசாயி படும் கஷ்டத்தை, விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. 

காக்கமுட்டை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது. அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார் மணிகண்டன். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன. 

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன், இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்து வந்தார் பின்னர் சில காரணங்களால் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இதனை இயக்குனர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டது. 

விவசாயி படும் கஷ்டத்தை, விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. நல்லாண்டியின் யதார்த்தமான நடிப்பும், விஜய்சேதுபதியின் நக்கல், நையாண்டியுடன் கூடிய கதாபாத்திரமும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!