கோகுல்நாத்தும், அவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். இதில் கோகுல்நாத் மட்டும் 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக விளங்குபவர் கோகுல்நாத். இவர் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அம்புலி, ஆ, ஜம்புலிங்கம், மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர இவர், கோகுல்நாத் யூனிக் டேலண்ட் அகாடமி' என்கிற பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், கோகுல்நாத்தும், அவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். இதில் கோகுல்நாத் மட்டும் 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த நிலையில் கோகுல்நாத் பெயர் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கோகுல்நாத், ‘கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதை பார்த்து சிறு குழந்தையை போல் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது” என குறிப்பிட்டு, கின்னஸ் புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற்று உள்ளதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு உள்ளார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கோகுல்நாத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.