KaathuVaakula Rendu Kaadhal |விடுமுறையில் வெளியாகும் நயன்தார மூவி ; இதுதான் ரிலீஸ் தேதியா ?

By Kanmani PFirst Published Nov 27, 2021, 8:03 AM IST
Highlights

KaathuVaakula Rendu Kaadhal | நயன்தாரா, சமந்தா இரட்டை நாயகிகளாக நடித்துள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

KaathuVaakula Rendu Kaadhal | லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சமந்தா ஆகிய இரு நாயகிகளுக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள படம்  காத்துவாக்குல ரெண்டு காதல்.  நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த  படத்தை லலித் குமார்,  விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதோடு இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், காதீஜா எனும் பெயரில் சமந்தாவும், கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாராவும்  நடித்துள்ளனர். இது குறித்து சமீபத்தில் வெளியான மூன்று போஸ்டர்களும் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. 

இந்நிலையில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த  படம் கிறிஸ்துமசை முன்னிட்டு டிசம்பர்  இறுதி வாரத்தில் வெளியாகலாம் என சொல்லபப்டுகிறது.

click me!