Maanaadu | சாட்டிலைட் விற்பனையிலுமா? மாநாடு படத்தை விடாது துரத்தும் சிக்கல் ; இந்த சேனல்ல தான் "மாநாடு"!!

By Kanmani PFirst Published Nov 27, 2021, 7:02 AM IST
Highlights

Maanaadu | மாநாடு படத்தின் சாட்டிலைட்  உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 

ஆனால் அன்று அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக  அனைத்து திரையரங்குகளிலும்8 மணி காட்சி திரையிடப்பட்டது.

இருந்தும் காலை முதல் பட்டாசு பாலபிஷேகம் என மாஸ் காட்டி வந்த ரசிகர்கள் சிறப்பு காட்சி ரத்தால் சற்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும். படத்தின் டைட்டிலிருந்து படத்தின் முதல் பாதி வரை ஒவ்வொரு நொடியையும்  வர்ணித்து தள்ளியிருந்தனர்.

நீண்ட நாள் கழித்து சிம்புவின் மாஸ் என்ட்ரியான இந்த படம் டைம் லூப் என்னும் கான்சப்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது திரும்ப திரும்ப தோன்றும் ஒரு விதமான கனவால் சுதாரித்துக்கொள்ளும் நாயகனும், வில்லனும் அந்த கனவை மெய்ப்பிக்காமல் தடுக்கும் காட்சிகள் . மீண்டும் மீண்டும் காண்பிக்கப்படும் காட்சிகள் சிறுது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் யுவனின் இசையை அதனை தனது பி ஜி எம்மால் மறக்கடித்து விடுகிறது. சிம்புவின் மற்ற படங்களை போல் அல்லாமல் இந்த படத்தில் கவர்ச்சி சிங்களூ, பிரமாண்ட என்ட்ரி சாங்கோ இடம்பெறவில்லை இதுவே சிம்பு படத்தில் பெரிய மாற்றத்தை காண்பிப்பதாக உள்ளது. 'வரேன் திரும்ப வரேன்' என்னும் ஒரே ஒரே பஞ்ச்  மட்டுமே சிம்புவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அக்கா மொத்தம் இந்த படம் சிம்புவை புதிய மைல் கல்லாகவே அமைந்துள்ளது. சமீபகாலமாக சிம்புவின் எந்த படமும் ஹிட் அடிக்காத நிலையில் இந்த படம் அந்த தோல்விகளுக்கு முற்று புள்ளி வைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக திரையிடப்பட்ட மாநாடு படத்தின் சேட்டிலைட் விற்பனையிலும் பல குழப்பங்கள் நீண்டுள்ளன. இந்த படத்தை முன்பு விஜய் டெலிவிசன் மூலம் சாட்டிலைட் உரிமம்  பதிவு செய்யப்பட்டது. ஆனால் திரைப்பட வெளியீட்டிற்கு முன் பேசிய தொகையை விஜய் டிவி நிறுவனம் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு உதயநிதி ஸ்டாலினின் கலைஞர் டிவி உரிமையை கைப்பற்ற முன் வந்துள்ளது.பொங்கல் விருந்தாக மாநாடு படத்தை வெளியிட எண்ணிய இந்த நிறுவனம் பட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.  ஆனால் Sony Live க உடன் ஏற்கனவே அந்த தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் பொங்கல் பிரீமியர் தேதி ஒத்துவரவில்லை. பின்னர் கலைஞர் டிவி உடனான  ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருவழியாக விஜய்டிவி "மாநாடு " படத்தின் சாட்டிலைட் உரிமையை 8 கோடிக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே யோகி பாபாவுவின் மண்டேலா உள்ளிட்ட படங்களை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்த விஜய் டீவியில், புத்தாண்டு அல்லது பொங்கல் ஸ்பெஷலாக இந்த படத்தை பார்க்கலாம்.....

click me!