
போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற ஹிட் படங்களை கொடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 4 ஆண்டு இடைவேளைக்கு பின் வெளியாகி உள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இதில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், இது அவரது 25-வது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபது ரேம்போ என்கிற கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கத்திஜாவாகவும் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க திரையரங்குகள் முன்பு கொண்டாடினர். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விமர்சனங்களை நெட்டிசன்கள் டுவிட்டரில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது காணலாம்.
காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் பாதி குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “என்ன ஒரு கான்செப்ட். இடைவேளை காட்சி அருமையாக இருந்ததாகவும், திரைக்கதை சிறப்பாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அனிருத்தின் இசை, நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு வேறலெவலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இடைவேளை வரை படம் சிறப்பாக உள்ளதாகவும், விஜய் சேதுபதி திறம்பட நடித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ள நெட்டிசன், நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ரொமாண்டிக் காட்சிகளில் கலக்கி இருப்பதாகவும், ரெடின் சில காட்சிகளில் ஸ்கோர் பண்ணி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படம் பக்கா என்ஜாய்மெண்டா இருப்பதாகவும், கதிஜா மற்றும் கண்மணி இருவருக்கும் இடையேயான சீன் அல்டிமேட்டாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ள நெட்டிசன், இருவருக்குமான ஸ்கிரீன் ஸ்பேஸும் சரியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாதி விமர்சனத்தை பார்க்கும்போது படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.