KaathuVaakulaRenduKaadhal: Rambo-வாக மாறிய விஜய் சேதுபதி! வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Published : Nov 15, 2021, 10:43 AM ISTUpdated : Nov 15, 2021, 10:55 AM IST
KaathuVaakulaRenduKaadhal: Rambo-வாக மாறிய விஜய் சேதுபதி! வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

சுருக்கம்

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகர் விஜய் சேதுபதியுடன் (vijay Sethupathy)  நயன்தாரா (Nayanthara) - சமந்தா (Samantha) முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தின் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும், சமந்தாவும், விஜய் சேதுபதியுடன் தனித்தனியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஒன்றாக இணைந்து நடித்ததில்லை. இந்நிலையில் முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நயன்தாரா - சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார்.

குறிப்பாக நயன்தாராவின் காதலராக விக்னேஷ் சிவன், 'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் அப்டேட் பல நாட்களுக்கு பின் நேற்றைய தினம் வெளியானது. அதில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இதைத்தொடர்ந்து சற்று முன்னர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம், சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி 3 முகத்துடன் இருப்பது போன்றும், 'Rambo'  ராம்போ என்ற பெயர் ஆங்கிலத்தில் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதற்கு R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என விரிவாக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கியுள்ளது மட்டுமின்றி 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து, ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நிறைவுபெற்ற நிலையில், விரைவில் ஓடிடி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதியின் 'Rambo' போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!