விஜய் சேதுபதியை தொடர்ந்து சூர்யாவுக்கு சிக்கல்..! சூர்யாவை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக.!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 6:50 PM IST
Highlights

வன்னிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக செயல்படுவதை போல ஜெய் பீம் படத்தில் கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிகழ்வுகள் அப்பட்டமாக மறைக்கப்பட்டுள்ளது.

வன்னிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக செயல்படுவதை போல ஜெய் பீம் படத்தில் கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிகழ்வுகள் அப்பட்டமாக மறைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என பலராலும் பாராட்டப்ட்ட ஜெய் பீம் படத்தால் தற்போது நாளொறு பிரச்சினை வெடித்துக் கொண்டிருக்கிருக்கிறது. படத்தில் வன்னியர்களை திட்டமிட்டு அவதூறு செய்துள்ளதாக பா.ம.க.-வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல் கடைமட்ட தொண்டன் வரை ஜெய் பீம் படக்குழு அதனை தயாரித்த சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Jai Bhim படத்தில் வில்லனுக்கு காடுவெட்டி குருவின் பெயரை நினைவுபடுத்துவது போல குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டதற்கு அவரது மகன் மற்றும் மருமகன் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை வெளியிடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் வன்னியர்கள் பகிரகங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த மிரட்டல்களுக்கு சூர்யா தரப்பு அஞ்சுவது போல் காட்டிக்கொள்ளவில்லை. மேலும் விசிக உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் பா.ம.க-வினரை கொதிப்படைய வைத்துள்ளது.

இந்தநிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை களங்கப்படுத்தியதற்காக நடிகர் சூர்யா, படத்தை தயாரித்த அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பா.ம.க-வினர் புகார் மனு அளித்துள்ளனர். பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பா.ம.க.-வினர் சென்று புகார் மனுவை வழங்கி இருக்கின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ஜெய் பீம் படத்தில் வன்னியர்கள் திட்டமிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், வன்னியர்கள் புனித சின்னம், தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தியுள்ளனர். வன்னியர் சமூக மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்வு குறித்து தெரியாது என்று பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூருவில் ஒரு இளைஞர் காலால் எட்டி உதைத்தார். அதைப்போலவே வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவை எட்டி உதைப்போம். சூர்யா எங்கு சென்றாலும் அவரை சும்மா விட மாட்டோம். சூர்யாவை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர் கன்னட நடிகர் புனீத் குமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வைத்து ஒரு இளைஞர் காலா எட்டி உதைத்தார். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். விஜய் சேதுபதியிடம் தேவர் குரு பூஜைக்கு சென்றீர்களா என்று கேட்டதாகவும், அதற்கு யார் குரு என்று விஜய் சேதுபதி கூறியதால் அந்த நபர் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக விஜய் சேதுபதிக்கு முக்குலத்தோர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு இந்து மக்கள் கட்சி பரிசும் அறிவித்தது.

இந்தநிலையில் விஜய் சேதுபதி உதை வாங்கியதை சுட்டிக் காட்டி, நடிகர் சூர்யாவையும் அதேபோல் உதைப்போம் என்று பா.ம.க.-வினர் அறிவித்துள்ளது பரபரபபி கிளப்பியிருக்கிறது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை ஜெய் பீம் மோதல் முடிவுக்கு வராது என்று பா.ம.க.-வினர் கூறியுள்ளனர்.

click me!