
நடிகர் சூர்யா நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'காப்பான்'. 'மாற்றான்' படத்திற்கு பின், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இப்படம் வெளியாவதற்கு பின், பழைய விஜயகாந்த், மற்றும் அர்ஜுன் படங்கள் போல் உள்ளது என ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும் கிராப்பிக் காட்சி, ஹாரிஸ் ஜெயராஜின் இசை இந்த படத்தில் அதிகம் பேசப்பட்டது.
படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'சிறுக்கி' பாடலின் வீடியோ தற்போது யுடியூபில் படத்தில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பாடலில், கிராமத்து கெட்டப்பில் சூர்யா செம்ம குத்து குத்தியுள்ளார். பார்க்கும் ரசிகர்களையே எழுந்து ஆட வைக்கும் அளவிற்கு, மிகவும் கலர் ஃபுல்லாகவும், உற்சாக மூட்டும் விதமாகவும் அமைத்துள்ளது இந்த பாடல்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் மிரட்டல் வில்லனாக ஆர்யா, நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி, மோகன் லால், உமா பத்மநாதன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிறுக்கி பாடலின் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.