கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’...சூர்யாவின் மார்க்கெட்டைக் காப்பானா இல்லை தோப்பானா? FDFS கமெண்டுகள்...

By Muthurama LingamFirst Published Sep 20, 2019, 1:24 PM IST
Highlights

தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்த கே.வி.ஆனந்த், சூர்யா காம்பினேஷன் என்றாலும் கூட இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் ஆர்வக்கோளாறின் உச்சமாக அரசியல்,நாட்டுப்பற்று, பிரதமர், பாதுகாப்பு, பாகிஸ்தான்,காஷ்மீர்,சதி ,சூழ்ச்சி, காதல்,மோதல்,விவசாயம் ,கார்ப்பரேட், ஸ்டெர்லைட்டு,காவேரி பிரச்சினை என்று ஒரு டஜன் பஞ்சாயத்துக்களை ஒரே படத்தில் சொல்லத்துடித்திருப்பதால் படம் படு திகட்டலாக இருக்கிறது என்பதே முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் பெரும்பாலானோரின் கமெண்டாக இருக்கிறது.

 கடந்த நாலைந்து வருடங்களாகவே தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்துவரும் சூர்யாவின் ‘காப்பான்’படத்துக்கு இன்று அதிகாலை சிறப்புக்காட்சிகளும் போடப்பட்ட நிலையில் ‘சோனமுத்தா நாலாவது படமும் ஊத்திக்கிச்சா’ என்று பெரும்பாலும் நெகடிவ்வான கமெண்டுகளே வருகின்றன. இன்னும் சிலர் முதல் பாதி ஓ.கே. ஆனால் ரெண்டாம் பாதி? ...சாவுங்கடா’ என்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்த கே.வி.ஆனந்த், சூர்யா காம்பினேஷன் என்றாலும் கூட இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் ஆர்வக்கோளாறின் உச்சமாக அரசியல்,நாட்டுப்பற்று, பிரதமர், பாதுகாப்பு, பாகிஸ்தான்,காஷ்மீர்,சதி ,சூழ்ச்சி, காதல்,மோதல்,விவசாயம் ,கார்ப்பரேட், ஸ்டெர்லைட்டு,காவேரி பிரச்சினை என்று ஒரு டஜன் பஞ்சாயத்துக்களை ஒரே படத்தில் சொல்லத்துடித்திருப்பதால் படம் படு திகட்டலாக இருக்கிறது என்பதே முதல் நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் பெரும்பாலானோரின் கமெண்டாக இருக்கிறது.

நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா. 100 பேரைக் காப்பாற்ற ஒரு உயிர் போனால் பரவாயில்லை என்று நினைக்கும் மோகன்லாலை தீவிரவாதிகள் கொன்றுவிட, அவரது அதே பதவிக்குக் கொண்டுவரப்படுகிறார் மகன் ஆர்யா. அந்த ஆர்யாவின் உயிருக்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்க, அந்த தீவிரவாதிகளைக் கொன்று குவித்து ஆர்யாவைக் காக்கிறார் சூர்யா. இதுல எங்கய்யா கதை இருக்கு? என் கதைன்னு கேட்டு கோர்ட்டுக்குப் போனவரைக் கூப்பிடுங்கய்யா என்று உங்களுக்குக் கோபம் வந்தால் அது நியாயமே.

பிரதமரின் செக்ரட்டரியாக வரும் ஆயிஷா தேவைப்படும் சமயத்திலெல்லாம் சூர்யாவிடம் ரொமான்ஸ் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜை புதிய படத்துக்கு புக் பண்ணி அவருக்கு மேலும் செலவு செய்வதற்குப் பதில் அவருடைய பழைய டியூன்களை எடுத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் அவரும் அதைத்தானே செய்கிறார் என்று பல மக்கள் சொல்லிவைத்தாற்போல் கமெண்ட் அடிக்கிறார்கள். மொத்தத்தில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் ‘காப்பான்’வரும் திங்களன்றே ‘தோப்பான்’என்றே நம்பப்படுகிறது.

click me!