
பாலாஜி ஹாசன் கருத்துக் கணிப்புகள் பெரும்பான்மையானவை உண்மையாகி இருக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடினார் நயன்தாரா. அவர்களுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாலாஜி ஹாசன் தனது பேஸ்புக் பக்கத்தில் நயன்தாராவின் திருமணம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘’சென்றாண்டு 2018 ல் புதுயுகம் தொலைக்காட்சியில் குருபெயர்ச்சி பற்றிய நிகழ்ச்சியில் "அடுத்த ஆண்டு அதாவது 2019 (இந்த ஆண்டு) செல்வி நயன்தாராவுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கணித்து இருந்தோம். பழைய நண்பர்கள் அனைவருக்கும் இது தெரியும். புதிய காணொளியில் அந்த காணொளி பார்த்த நண்பர்களுக்கும் தெரியும். இன்று தந்தி தொலைக்காட்சியில் அது பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.
விஷால் , ஆர்யா, நமல் ராஜபக்சே, நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி போன்றவர்களுக்கு கணித்தது நடந்ததுபோல இவர்களுக்கு மிகவும் நடக்க உள்ளது. திருமண கணிப்பில் இது ஏழாவது வெற்றி. ஜோதிடத்தில் திருமண நிர்ணய கால நிர்ணயம் மிக முக்கியமானது அதை கற்றுக் கொடுத்த எனது ஆசிரியர்களுக்கு நன்றி’ என அவர் தெரிவித்துள்ளார்.
பாலாஜி ஹாசனின் இந்தக் கணிப்பால் விக்னேஷ் சிவன் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் நயன்தாராவின் ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடந்து விடக்கூடாது என்கிற பதற்றத்தில் இருக்கிறார். திருமணம் நடந்தால் அடுத்து நயன்தாராவை சினிமாவில் பார்க்க முடியாது என்கிற எண்ணமே அந்தப் பதற்றத்திற்கு காரணம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.