'காலா' திரைப்படம் ரஜினியை வைத்து ஓடாது...! ரஞ்சித்தை வைத்து தான் ஓடுகிறதா...!

 
Published : Jun 07, 2018, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
'காலா' திரைப்படம் ரஜினியை வைத்து ஓடாது...! ரஞ்சித்தை வைத்து தான் ஓடுகிறதா...!

சுருக்கம்

kaala movie moving with rajinth not for rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவோடு இன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகும் திரைப்படம் 'காலா'.

இந்த படத்தில்  இரண்டாவது முறையாக ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித்  இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

எப்போதும் ஒரு படத்தை அந்த படத்தின் நடிகர்களை வைத்து ப்ரோமோஷன் செய்து ஓட்டுவது தான் வழக்கம். ஆனால் இந்த படத்தில் அந்த முறை சற்று மாறி இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஒரு சில திரையரங்கங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட, பெரிய அளவிலான கட்டவுட்டுகள் ரஞ்சித்துக்கும்  வைக்கப்பட்டுள்ளது. 

இதனால், இனி ரஜினிகாந்தை வைத்து படத்தை ஓட்ட முடியாது என தெரிந்து, ரஞ்சித்தை வைத்து படத்தை ஓட்டுவதாக ஒரு சில பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் அடிப்பட்டு வருகிறது. ஒரு இயக்குனருக்கு இது போன்ற கட்டவுட்டுகள் வைத்து அவருடைய படத்தை வரவேற்பது, நல்ல முன்னேற்றம் என்றாலும். கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்று வெறித்தனமான ரசிகர்களை வைத்துள்ள ரஜினிகாந்தின் படம் அவரை வைத்து ஓடாது என பரவி வரும் வார்த்தைகளை ரஜினிகாந்தின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி