காலா படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவர் கைது…. எங்கு தெரியுமா ?

 
Published : Jun 06, 2018, 10:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
காலா படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவர் கைது…. எங்கு தெரியுமா ?

சுருக்கம்

Kala film was live relay by a fan in facebook in america

பெரும் சர்ச்சைகளுக்கு  மத்தியில் தமிழ்நாட்டில் நாளை ரிலீஸ் ஆகும் காலா திரைப்படம் இன்று அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் சற்று முன் திரையிடப்பட்டது. இந்த படத்தை அமெரிக்காவில் ஒருவர் தியேட்டரில் இருந்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா  திரைப்படம்  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே சில மணி நேரங்களுக்கு முன்பு  வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில்  காலா திரைப்படம்  திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ரசிகர் ஒருவர் படத்தை பேஸ்புக்கில்  நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்தார்.

இதைப்பார்த்த திரையரங்கு ஊழியர் ஒருவர் உடனடியாக  போலீசில் புகார் அளித்தார், இதையடுத்து போலீசார் அந்த  நபர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி