
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பழம்பெரும் நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு, நடிகையர் திலகம் எனும் பெயரில் திரைக்கு வந்தது. இந்த நடிகையர் திலகம் திரைப்படத்தை பார்த்த பலரும், கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி இருந்தனர். மகா நடிகையான சாவித்திரி தேவிக்கு, இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, என்பதை இந்த படத்தின் வசூல் நிரூபித்தது.
இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி தேவிக்கு, மது அருந்தும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சியை பார்த்த ஜெமினியின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், நடிகையர் திலகம் படத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அப்பாவை அவமானப்படுத்துவது போல இருக்கிறது இந்த காட்சி எனவும் அவர் கூறி இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்த சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி, நடிகையர் திலகம் திரைப்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். திரையில் அம்மாவை பார்ப்பது போல இருந்தது என்று உருகி இருக்கிறார் விஜய சாமுண்டீஸ்வரி.
இந்த படத்திற்கு விஜய சாமுண்டீஸ்வரி எந்த எதிர்ப்பும் சொல்லாததால், அவர் மீது தற்போது கோபாமாக இருக்கிறார் கமலா செல்வராஜ். இது குறித்து பேசுகையில் நடிகையர் திலகம் திரைப்படத்தால், எங்கள் குடும்பம் இப்போது பிரிந்துவிட்டது என தெரிவித்திருக்கிறார் அவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.