
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நாளை 'காலா' திரைப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் அனைவர் மத்தியில் உள்ளது. இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்றே திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
திரைப்படத்தை பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சை சேர்ந்த, வாசகர் உமைர் சந்து என்பவர் 'காலா' திரைப்படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை ரசிகர்களிடம் வலைத்தளம் மூலம் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் பாடி லேங்குவேஜ், ஸ்டைலிஷ் லுக், டயலாக் டெலிவரி மிஸ் ஆகியுள்ளது. இப்போதுள்ள மல்டிபிளக்ஸ் ரசிகர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, ரஜினிகாந்த்தை பா.ரஞ்சித் கையாண்டுள்ளார்.
ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் முயன்றுள்ளார். ஆனாலும், எல்லா ரஜினி படங்களை போலவே, இதிலும் ரஜினி மட்டுமே முன்னணியில் நிற்கிறார்.
டெக்னிக்கலாக காலா சிறப்பாக உள்ளது.
முதலுக்கு மோசமில்லாத திரைக்கதை. ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள், கண்கவரும் நடன அமைப்புகள் உள்ளன. பெரும்பாலும் குடிசை பகுதிகள் பின்னணி கொண்ட கதை அமைப்பில், கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எடிட்டிங்கும் ஷார்ப்பாக உள்ளது.
நானே பட்கர் நடிப்பும் பாராட்டும் விதத்தில் உள்ளது. ரஜினிகாந்த்துக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வாசகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.