ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்துக்கிடையே வெளியானது காலா…. பட்டாசு வெடித்து மகிழ்ந்த  ரஜினி ரசிகர்கள்….

 
Published : Jun 07, 2018, 06:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டத்துக்கிடையே வெளியானது காலா…. பட்டாசு வெடித்து மகிழ்ந்த  ரஜினி ரசிகர்கள்….

சுருக்கம்

kala relese in tamilnadu morning show

சென்னை  புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இன்று அதிகாலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் காலா படம் ரிலீஸ் ஆனது. இந்த சிறப்பு காட்சிகளை  ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர்.

இதே போல் மதுரையில் இன்று அதிகாலை மூன்று மணியில் இருந்தே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மதுயைப் பொறுத்தவரை 11 தியேட்டர்களில் காலா திரையிடப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. சென்னை நகர் உள்பட உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கும் பின்னர் வெளியிடப்படுவதால் காலா அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி