நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகிறார் பாக்யராஜ் அணியின் ஐசரி கணேஷ்?...தேர்தலை தள்ளி வைக்க சதி செய்தார்...

Published : Jun 25, 2019, 01:09 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகிறார் பாக்யராஜ் அணியின் ஐசரி கணேஷ்?...தேர்தலை தள்ளி வைக்க சதி செய்தார்...

சுருக்கம்

நடிகர் சங்கத் தேர்தலை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைக்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட ஐசரி கணேஷும், அவரது நண்பரும் தன்னை அணுகியதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்நிலையில் எந்த நிமிடமும் ஐசரி கணேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

நடிகர் சங்கத் தேர்தலை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைக்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட ஐசரி கணேஷும், அவரது நண்பரும் தன்னை அணுகியதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்நிலையில் எந்த நிமிடமும் ஐசரி கணேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

தன்னை ஐசரி கணேஷ் அணுகியது தொடர்பாக நீதிபதி இன்று வெளியிட்ட அறிக்கையில்,``தலைமை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் எனது வீட்டில் வழக்கு எண் 16949 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக காலை 11.55 மணிக்கு நீதிமன்றப் பதிவாளர் எனக்கு போன் செய்தார். நிகழ்ச்சி நிமித்தமாக வேலூர் சென்றிருந்த நான் அதை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பினேன். அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கும்போது மணி 4.20. எனக்கு நன்கு அறிமுகமான ஆனந்தராமன் என்பவர் போன் செய்தார். தொடர்ந்து, மெதுவாக நடிகர் சங்க வழக்கு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது, ``இந்த வழக்கில் ஐசரி கே கணேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் பல பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார் " எனவும் தெரிவித்தார்.

``வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார். எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசியதையத்து அந்த போன் இணைப்பைத் துண்டித்து விட்டேன். நான் எனது இல்லத்தை அடையும் போது நேரம் 4.45 மணி. ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு என்பதால் எனது வீட்டின் முன் காவல்துறையும், பத்திரிகை ஆட்களும் இருந்தனர்.

இரண்டாம் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைவதற்குள் ஆனந்தராமனை லிஃப்ட் அருகே பார்த்தேன். மீண்டும் ஐசரி பற்றியும் வழக்கை ஒத்தி வைப்பது குறித்து பேசினார். நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஒருவரே நீதிபதியை தவறான முறையில் அணுகுவது அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்ற வழக்கின் போக்கில் குறுக்கிட்டதால் ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாக்யராஜ் அணி தேர்தலில் தோற்றுவிடும் சூழல் இருக்கும் நிலையில் நீதிபதியின் இந்த அறிக்கை அந்த அணியினரை பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!