அம்மன் அவதாரம் எடுத்த ஜூலி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Published : Sep 05, 2018, 06:50 PM ISTUpdated : Sep 09, 2018, 07:51 PM IST
அம்மன் அவதாரம் எடுத்த ஜூலி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

சுருக்கம்

பிக் பாஸ் புகழ் ஜூலி, தற்போது அம்மன் தாயி எனும் பக்தி படத்தில் நடித்து வருகிறார். என்ன தான் பிக் பாஸ் மூலம் எதிர்மறையான புகழை அவர் சம்பாதித்திருந்தாலும் இன்று திரைத்துறையில் அவர் நினைத்தபடி தொடந்து முன்னேறி கொண்டு தான் இருக்கிறார். 

பிக் பாஸ் புகழ் ஜூலி, தற்போது அம்மன் தாயி எனும் பக்தி படத்தில் நடித்து வருகிறார். என்ன தான் பிக் பாஸ் மூலம் எதிர்மறையான புகழை அவர் சம்பாதித்திருந்தாலும் இன்று திரைத்துறையில் அவர் நினைத்தபடி தொடந்து முன்னேறி கொண்டு தான் இருக்கிறார். 

ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் இவரின் கைவசம் சில திரைப்படங்களும் இருக்கின்றன. கேசவ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ்வரன் மற்றும் சந்திரஹாசன் என இரண்டு இயக்குனர்கள் இந்த அம்மன் தாயி படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஜூலி தான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதுவும் அம்மனாக. 

ரம்யா கிருஷ்ணன், கே.ஆர்.விஜயா போன்றோரை அம்மனாக பார்த்து பழகிய எங்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும், ஜூலி ஆர்மிக்கு இதெல்லாம் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. இந்த அம்மன் தாயி படத்தில் பிரமோ வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் ஜூலி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. 

எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணீர் குரலில் “அழைக்கட்டுமா தாயே?” என தொடங்கும் இந்த பாடல் கேட்கும் போதே அருள் பொங்குகிறது. 
பாடலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஜூலி வலுவாக நடித்திருக்கிறார். அதேசமயம் மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்களுக்கும் இந்த வீடியோ மிக சிறப்பாக தெரிந்ததால், மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ ஜூலியின் அம்மன் தாயி பிரமோ, மக்கள் மத்தியில் போய் சேர்ந்துடுச்சே என படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷின் D54 பட டைட்டில் லாக் ஆயிடுச்சு:ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு இதுதானா?
என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு திட்டிட்டாங்க! சிங்கம்புலி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!