
பொதுவாகவே கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வது நடிகர், நடிகைகளின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி பட்ட பழக்கங்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. இதனால் தான் கட்டி பிடித்து பேசும் வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தால், நம் கலாச்சாரத்திற்கு மாறி இரு கை கூப்பி வணக்கம் சொல்லுகின்றனர்.
ஆனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிற்காக நான் போராடினேன் என்று கூறி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி அனைவரும் முகம் சுளிக்கும் அளவிற்கு கட்டிப்பிடித்து ஆசைப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே தன்னை கட்டி பிடிக்க ஆளே இல்லை என ஸ்ரீயிடம் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய, ஜூலி நேற்றைய தினம் வெளியேற்றுவதற்காக அறிவிக்கபட்டவுடன் சினேகனை மட்டுமே மூன்று முறை கட்டிப்பிடித்தார். மேலும் ஆரவ், காயத்ரி, சக்தி என ஒருவரை கூட விடமால் கட்டி பிடித்தபடி இருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
ஆர்த்தி ஒரு நடிகையாக இருந்தபோதும், பிரியும் போது காயத்ரி மற்றும் ஒரு சிலரை மட்டுமே கட்டி பிடித்து பிரியாவிடை கொடுத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.