"பண்டிகை" யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்...

 
Published : Jul 17, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
"பண்டிகை" யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்...

சுருக்கம்

pandigai movie success

கடந்த 14ஆம் தேதி வெளி ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் "பண்டிகை" கிருஷ்ணா- ஆனந்தி நடிக்க, புதிய இயக்குனர் பெரோஸ் இயக்க, Tea time talks என்கிற நிறுவனத்தின் சார்பில் விஜயலட்சுமி தயாரித்து உள்ளார். 

இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்  வெளியிட்டு இருக்கிறார். இருமுகன், தேவி, சைத்தான், ஆகிய வெற்றி படங்களை வெளியிட்டு  உள்ள ஆரா சினிமாஸ், தங்களது வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக "பண்டிகை" படத்தையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

" திரை உலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.  இந்த நேரத்தில் பண்டிகை படத்தின் வெற்றி ஒரு ஒளிக்கீற்றாக வந்து இருக்கிறது. இது வரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன விதத்தில்   இயக்குனர்  பெரோஸ் தமிழ் திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

அவருடைய கடின உழைப்பும் , திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.225 காட்சிகளுடன் ஆரம்பித்தோம். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு  காரணமாக இப்போது காட்சிகள் கூட இருக்கிறது.இந்த வெற்றியை ரசிகர்களின் நாடி துடிப்பை உள்ளங்கை நெல்லி கனியாய் அறிந்து வைத்து இருக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எங்களது நிறுவனமான ஆரா சினிமாஸ் தமிழ் திரை உலகம் பெருமை கொள்ளும் தரமான படங்களை தொடர்ந்து வழங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்"  என்கிறார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ