ஆரவை  காதலிக்கிறேன் என  கூறி அசிங்கப்பட்டு நிற்கும் ஜூலி...

 
Published : Jul 13, 2017, 04:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஆரவை  காதலிக்கிறேன் என  கூறி அசிங்கப்பட்டு நிற்கும் ஜூலி...

சுருக்கம்

julee love aarav

ஜல்லிக்கட்டில் அரசியல் தலைவர்களை பற்றி பேசி பிரபலமானவர் ஜூலி. இதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனக்கு தானே பல ஆப்புகளை வைத்துக்கொள்கிறார்.

இதில் ஒன்று  தான் நேற்று நடந்த சம்பவம். இத்தனை நாள் ஓவியா ஆரவை காதலிப்பதாக கூறியதால், ஆரவ் பக்கம் கூட வராமல் இருந்த ஜூலி நேற்று "சிவாஜி" படத்தில் இருந்து" பூம்பாவா ஆம்பல் ஆம்பல்" என்கிற பாடலுக்கு நடனமாடிய படியே ஆரவை பார்த்துக்கொண்டிருந்தார். அதிலும் ஆரவ் அவருக்கு மீசை வரைந்து விடும்போது வைத்த கண் வாங்காமல் அவரை தின்னுவதுபோல் பார்த்தார்.

பின் காயத்ரியிடம் அக்கா கொஞ்சம் வாங்க உங்களிடம் பேசவேண்டும் என கூறி தனியாக அழைத்து சென்று கொஞ்சம் உங்க மைக்கை மூடிக்கொள்ளுங்கள் என கூறிய ஜூலி, எனக்கு என்னவோ தோணுது அக்கா என பேச ஆரம்பித்தார்.

அதற்கு காயத்ரி என்ன வென்று கேட்க, ஆரவை பார்த்தால் என்னவோ தோணுது, அவரை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோணுது... அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை, மதியம் மீசை வரைந்து விடும் போது கூட தன்னையே மறந்து நான் அவரை தான் பார்த்துக்கொண்டிருந்தேன்...  எனக்கு சொல்ல தெரியல, ஆனா பிடித்திருக்கிறது என கூறியதும்... அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த காயத்ரி பிடிச்சா அது காதலா தான் இருக்கும் என கூறினார்.

இந்த செய்தியை காயத்ரி அனைவரிடமும் கூற, ஜூலிகே தெரியாமல் ஆரவ் உட்பட பலரும் அவரை அசிங்கமாக பின்னால் இருந்து விமர்சித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அத்தைக்கு ஷாக் கொடுத்த சந்திரகலா; பயந்து நடுங்கும் காளியம்மாள் அண்ட் கேங்; 'கார்த்திகை தீபம்' அதிரடித் திருப்பம்!
கிச்சா சுதீப்பின் 'மார்க்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முழு விவரம்