ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும் நிம்மதியா வாழ்ந்திடுவேன் – ஜோக்கர் நடிகர் குரு சோமசுந்தரம்!

By Rsiva kumar  |  First Published Dec 30, 2024, 4:09 PM IST

Joker Movie Actor Guru Somasundaram Said That Rs 10000 is Enough For Peaceful Life: எனக்கு ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும் நான் நிம்மதியாக வாழ்ந்துடுவேன் என்று நடிகர் குரு சோமசுந்தரம் கூறியுள்ளார்.


Joker Movie Actor Guru Somasundaram Said That Rs 10000 is Enough For Peaceful Life: ஆரண்ய காண்டம் படம் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். இந்தப் படத்திற்கு பிறகு ஏரளமான படங்களில் நடித்து பிரபலமானார். இதன் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்து வெளியான படம் தான் ஜோக்கர். இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார்.

இந்திய குடியரசுத் தலைவராக தன்னை நினைத்துக் கொள்ளும் கிராமவாசி. தனது கிராமத்தை சுற்றி நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை.

Tap to resize

Latest Videos

கோட் படத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த பிக் பாஸ் ஜூலி: அண்டாகாகசம் 3 நிகழ்ச்சியில் போராட்டம்!

இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிகைன்வுட்ஸ் விருது பெற்றார். மலையாளத்தில் இவர் நடித்த மின்னல் முரளி படத்திற்காக பல விருதுகள் வென்றுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஃபிரண்டாகவும் நடத்திருந்தார். ஜெய் பீம் படத்திலும் இவரது கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். ஒரு சாதாரணமான நடிகராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தனது எளிமையான நடிப்பின் காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அதோடு அடிக்கடி இயக்குநர்களின் கண்களிலும் தென்படுகிறார். இதனால் அடுத்தடுத்து சினிமாவிலும் நடித்து வருகிறார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 6 படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

நிஜமாவே 'வொண்டர் வுமன்' தான்.. 4வது கர்ப்பம் குறித்து மனம் திறந்த நடிகை கால் கடோட்

சினிமாவில் மட்டுமின்றி ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். ஒரு பொய் மற்றும் இறுதி அறம் என்ற குறுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இதே போன்று டாப்லெஸ், மீம்ஸ் பாய்ஸ், விக்டிம் என்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த குரு சோமசுந்தரம் கூத்து பட்டறையின் மூலமாக சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சென்னையில் வாடகை வீட்டில் தங்கி சினிமாவில் நடித்து வரும் குரு சோமசுந்தரம் தனக்கு ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும். ஏனென்றால் தனக்கு எந்த ஈமெஐயும் கிடையாது. வாடகை வீடு தான். அதனால், அவ்வளவு வாடகை கெட்ட வேண்டும், இவ்வளவு வாடகை கெட்ட வேண்டும், ஈமெஐ கட்ட வேண்டும் என்ற பயம் எல்லாம் தனக்கு கிடையாது. நிம்மதியாகவே வாழ விரும்புகிறேன். ஒரு போதும் நிம்மதியை இழந்து ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

உண்மையில் அவர் கூறியது சரி தான். இன்றைய காலகட்டத்தில் இருப்பதை வைத்து கொண்டு பறப்பதற்கு தான் எல்லோருமே ஆசைப்படுகிறோம். அதாவது ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம். நிம்மதியான வாழ்க்கைக்கு ஆடம்பரம் அவசியமில்லை. கடன், ஈமெஐ என்று எதுவும் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாக தானாகவே வரும்.

click me!