மலையாளியா இருந்தாலும் விஜய் சேதுபதி முன் திருக்குறள் கூறி அசத்திய அன்ஷிதா; வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Dec 30, 2024, 2:33 PM IST

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய அன்ஷிதா விஜய் சேதுபதி முன், பேசும்போது திருக்குறள் கூறி அசத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற இன்னும் சில தினங்களே உள்ளதால் போட்டியாளர்களை தீவிரமாக குறைத்து வருகிறார் பிக் பாஸ். அதன்படி ஏற்கனவே இரண்டு முறை டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், இந்த வாரமும் அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி ஆகிய இருவர் வெளியேறி உள்ளனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் டாப் 10 கண்டஸ்டண்ட்ஸ் மட்டுமே உள்ளனர். இவர்களில் இருந்து அடுத்தடுத்த வாரங்களில் யார் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல் டபுள் எவிக்ஷன் மீண்டும் நடைபெறுமா? என்கிற ஆர்வமும் எழுந்துள்ளது.

Tap to resize

Latest Videos

ட்ரைலருகே இப்படியா? 'கேம் சேஞ்சர்' நாயகன் ராம் சரணுக்கு 256 அடி கட்டவுட் வைத்து மிரட்டும் ரசிகர்கள்!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து, அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி வெளியேறிய நிலையில்... தற்போது தீபக், பவித்ரா ஜனனி, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி நாராயணன், ரயான் ஆகிய 10 பேர் உள்ளனர். இவர்களில் மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு மேல் இருந்த போட்டியாளர்கள் இந்த முறை டைட்டிலை தட்டிச் செல்வார்களா? அல்லது வைல்ட் கார்டு  சுற்றும் மூலம் உள்ளே நுழைந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. காரணம் ஒருவருக்கொருவர் டஃப் கொடுத்து தங்களுடைய கருத்தை கூறி வருவதோடு, பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடனும் முன்னேறி வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளரான அன்ஷிதா வீட்டை அஞ்சிதா வெளியேறும்போது, விஷால் காதில் ஏதோ சொன்னது விஷால்.. அன்ஷிதாவுக்கும் காதல் வலை விரித்தாரா? என விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது அன்ஷிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, அகம் டிவி வழியாக முத்துக்குமரனை பார்த்து பேசும் போது திருக்குறள் ஒன்றை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவ்வளவு ஏன் விஜய் சேதுபதி கூட கை தட்டி அன்ஷிதாவின் பேச்சை வரவேற்றுள்ளார்.

'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!

அன்ஷிதா பேசியதாவது,  முத்துகுமரா என கூறிய பின்னர்,  முத்துக்குமார் எழுந்து அன்ஷிதாவை பார்த்து நான் உனக்கு ஒன்னே ஒன்று சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.  இந்த பிக் பாஸ் வீடு எல்லோருக்கும் வாழ்க்கையில் பெரிய பெரிய பரிசுகளை கொடுத்துள்ளது. உனக்கு பிக் பாஸ் கொடுத்த, முக்கியமான பரிசாக நான் நினைப்பது என்னவென்றால், இந்த வீட்டுக்குள் நீ வரும்போது... எனக்கு வெளியே நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. அதெல்லாம் இல்லை என்று வெளிப்படுத்தி, உண்மையிலேயே நான் அன்பானவள் என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறினாய். அதில் எது மாறி இருக்கு, மாறவில்லை என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனி உன் வாழ்க்கையில் உன்னை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு நான் யார் என்று தெரியும் போங்கடா என்கிற  மனநிலையை உனக்கு பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதை வாழ்க்கை முழுவதும் பயன்படுத்திக் கொள் என கூறுகிறார்.

இதற்கு அன்ஷிதா தன்னுடைய நன்றிகளை தெரிவித்த உடனே, "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு". என்கிற திருக்குறை கூறி. அனைவரும் கொஞ்சம் பார்த்து பேசுங்க என அட்வைஸ் கொடுத்தார்.  இதில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது, ஒரு மலையாளியாக இருந்தாலும் இரண்டு அடி தமிழ் திருக்குறளை போட்டியாளர்களுக்கு ஒரு உதாரணமாக கூறிவிட்டு அன்ஷிதா வெளியேறி உள்ளது தான். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

exit speech with 👌pic.twitter.com/DfSdeFCegH

— BiggBossTamil8 (@BigBossTamilOTT)

 

click me!