ஜீவாவின் ‘ஜிப்ஸி’யில் நாயகியாகிய இமாசல பிரதேச அழகி...! 

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 05:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
ஜீவாவின் ‘ஜிப்ஸி’யில் நாயகியாகிய இமாசல பிரதேச அழகி...! 

சுருக்கம்

jeeva acting jipsi movie for raju murugan

ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி ’.  இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். 

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நேற்று தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 
இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Aparna Das : அட அட! வெள்ளை சேலையில் என்ன அழகு! அபர்ணா தாஸ் டக்கரான கிளிக்ஸ்!!
Box Office: தியேட்டர்களில் வசூல் பூகம்பம்! ரூ.34 கோடியை தட்டி தூக்கிய ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்'!