முதல் நாளே படப்பிடிப்பில் சண்டை போட்ட பிரபு தேவா...!

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
முதல் நாளே படப்பிடிப்பில் சண்டை போட்ட பிரபு தேவா...!

சுருக்கம்

prabudeva fight in first day movie shoot

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் ‘புரொடக்சன் NO 12’ படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை பூஜையுடன் தொடங்கியது.

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ சி முகில்.

‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும் ’என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று காலையில் சென்னையில் தொடங்கியது. முதல் நாளான நேற்றே இதில் பிரபுதேவா, மற்றும் முகேஷ் திவாரி கலந்து கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் பிரபுதேவா போலீஸ் கெட்டப்பில் சண்டை போட்டுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Aparna Das : அட அட! வெள்ளை சேலையில் என்ன அழகு! அபர்ணா தாஸ் டக்கரான கிளிக்ஸ்!!
Box Office: தியேட்டர்களில் வசூல் பூகம்பம்! ரூ.34 கோடியை தட்டி தூக்கிய ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்'!