ஜெயஸ்ரீயின் முதல் கணவர் இவரா..? குழந்தை ரித்வா மீது பாசத்தை கொட்டிய தந்தை பிரிந்தது ஏன்..? சமூக வலைத்தளத்தை சுற்றும் வைரல் வீடியோ..!

Published : Dec 09, 2019, 01:02 PM IST
ஜெயஸ்ரீயின் முதல் கணவர் இவரா..? குழந்தை ரித்வா மீது பாசத்தை கொட்டிய தந்தை பிரிந்தது ஏன்..?  சமூக வலைத்தளத்தை சுற்றும் வைரல் வீடியோ..!

சுருக்கம்

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ, அவருடைய இரண்டாவது கணவர் ஈஸ்வருக்கும் , பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் தவறான உறவு உள்ளதாகவும், எனவே கடந்த 6 மாதமாக, தன்னை அடித்து கொடுமை படுத்தி வந்ததோடு, தன்னை விவாகரத்து செய்து விட்டு மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினார் என குற்றம் சாட்டினார்

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ, அவருடைய இரண்டாவது கணவர் ஈஸ்வருக்கும் , பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் தவறான உறவு உள்ளதாகவும், எனவே கடந்த 6 மாதமாக, தன்னை அடித்து கொடுமை படுத்தி வந்ததோடு, தன்னை விவாகரத்து செய்து விட்டு மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறினார் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில், நடிகர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஈஸ்வர் தன்னுடைய குழந்தையிடம் கூட தவறாக நடந்து கொண்டார் என ஜெயஸ்ரீ கூறியது, ஈஸ்வர் இதனை நாள் மக்களிடம் சம்பாதித்து வைத்திருந்த, நல்ல பெயரை கெடுக்கும் விதத்தில் அமைந்தது.

ஜெயஸ்ரீயின் புகாரை மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் என இருவருமே மறுத்தனர். தாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வந்ததாகவும் அது ஜெயஸ்ரீயின் கண்களுக்கு தவறாக தெரிந்ததாக மஹாலட்சுமி கூறினார். நடிகர் ஈஸ்வரும், ஜெயஸ்ரீயின் நோக்கம் பணம் தான் என்றும், மகாலக்ஷ்மியின் கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு உள்ளதாக கூறி அதிரவைத்தார் என்பது நாம் அறிந்தது தான்.

சின்னத்திரை வட்டாரத்தில் காட்டு தீ போல் பற்றி எரியும் இந்த விஷயம் ஒரு புறம் இருக்க, தற்போது ஜெயஸ்ரீயின் முதல் கணவர் மதனின் பெயர் அதிகம் அடிபட்டு வருகிறது. ஏன் முதல் கணவரை விட்டு ஜெயஸ்ரீ பிரிந்தார் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சந்தேகம் எழ காரணம், ஜெயஸ்ரீயின் முதல் கணவர் குழந்தை ரித்வாவுடன் பல்வேறு, இடங்களில் எடுத்து கொண்ட புகைப்பட வீடியோ  தொகுப்பு. அதில் குழந்தையுடன் மிகவும் சந்தோஷமாக சிரித்து விளையாடியவாறு இருக்கும் அவர் ஏன் குழந்தையை விட்டு பிரிந்தார். உண்மையில் தவறு ஜெயஸ்ரீ மீது உள்ளதா? என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதற்கு ஜெயஸ்ரீ தான் பதில் சொல்ல வேண்டும்... தற்போது வெளியாகி வைரலாகி வரும் வீடியோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்