
தமிழ் சினிமாவில், தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக தமிழ் பேசும், தமிழகத்தை சேர்ந்த நடிகைகளின் வருகை கோலிவுட் சினிமாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தன்ஷிகா, இந்துஜா, அதுல்ய ரவி என சொல்லிக்கொண்டே போகலாம்.
'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'ஏமாலி', 'நாகேஷ் திரையரங்கம்', 'அடுத்த சாட்டை' என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'கேப்மாரி'.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின், செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகை அதுல்யா நடிப்பின் மீது மிகவும் அர்ப்பணிப்போடு உள்ள நடிகை என கூறினார்.
உதாரணமாக படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றையும் கூறினார். ஜெய்க்கும் - அதுல்யாவிற்கும் இந்த படத்தில் முத்த காட்சி ஒன்று உள்ளது. கேமராவில் அந்த காட்சியை பார்த்த அதுல்யா, சரியாக வரவில்லை எனவே, மீண்டும் முத்த காட்சிக்கு ஒன் மோர் போகலாம் என கூறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
அனைவர் மத்தியிலும் இதை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதும், முகம் சிவக்க சிறிது சமாளித்தார் அதுல்யா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.