ஷங்கரை சந்தடிசாக்கில் கலாய்த்த ஜெயம்ரவி: இதுக்குப் பேர்தான் கெத்து!

Asianet News Tamil  
Published : Jan 26, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஷங்கரை சந்தடிசாக்கில் கலாய்த்த ஜெயம்ரவி: இதுக்குப் பேர்தான் கெத்து!

சுருக்கம்

jayam ravi teased sankar

தமிழ் சினிமாவில் விமர்சனத்துக்கும், கலாய்க்கப்படுதலுக்கும் அப்பாற்பட்ட ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். எம்மாம் பெரிய நடிகர், நடிகைகளும் இவர்களை சீண்டிப் பார்க்கவோ, கிண்டல் விடவோ மாட்டார்கள்.

சினிமாவுக்கு வெளியிலிருக்கும் நபர்களும், சினிமாவிலிருந்து வெளியே இருக்கும் நபர்கள் வேண்டுமானால் இந்த ஆளுமைகள் மீது பாய்வார்களே தவிர உள்ளேயிருந்து விமர்சனங்கள் வராது.

அப்பேர்ப்பட்ட ஆளுமைகளில் ஒருவர்தான் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இந்நிலையில் இப்போது சந்தடிசாக்கில் ஹீரோ ஒருவர் ஷங்கரை போகிறபோக்கில் கலாய்த்திருக்கிறார்.

அந்த ஹீரோ! எந்த வம்புதும்புக்கும் போகாத ஜெயம்ரவிதான்.

ரவி அப்டில்லாம் பேசமாட்டாரே! நல்ல புள்ளையாச்சே! என்று தாவாங்கட்டையை தடவாமல் மேலே வாசியுங்கள்...
டிக்! டிக்! டிக்! படத்தின் ப்ரமோஷனுக்காக விஜய் டி.வி. பேட்டியிலிருந்தார்கள் ஜெயம்ரவியும், ஹீரோயின் நிவேதா பெத்துராஜும்.

அப்பட அனுபவத்தை பற்றி பேட்டியாளர் டி.டி. வரிசையாக கேட்டுக் கொண்டிருக்க ரவி விளக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அப்படத்தின் செட்டுக்களைப் பற்றி பேச்சு வந்தது.

விண்கலம் போல் அமைக்கப்பட்டிருந்த செட்டை பற்றி பேசிக் கொண்டிருந்த ரவி, எப்போதும் கயிற்றில் தொங்கியபடி, கழுத்தை சாய்த்து வைத்தே பேசிக் கொண்டிருப்போம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தவர்...

“இந்த படத்துகான செட் ரொம்ப வித்தியாசமானது. வேற படத்துக்கான செட்டை கொஞ்சம் மாத்தியமைச்செல்லாம் இதுக்கு படம் பிடிக்க முடியாது.” என்று ஒரு போடுபோட்டார்.

இதைத்தான் ஷங்கரை ஆன் தி வேயில் ஜெயம் ரவி கலாய்த்திருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்க துணை இயக்குந குருவிகள். இதற்கு விளக்கம் சொல்பவர்கள் ”ஜெயம்ரவியோட அண்ணன் மோகன் ராஜா தன்னோட ‘வேலைக்காரன்’ படத்துக்காக போட்டிருந்த குடிசைப்பகுதி செட்டை அப்படியே தன்னுடைய ‘இந்தியன் -2’ படத்துக்காக சில கோடிகள் கொடுத்து வாங்கிய ஷங்கர், சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தப்போறார்.

அதைத்தான் ஜெயம் ரவி மறைமுகமா சொல்லிக் காட்டி கலாய்ச்சிருக்கிறார்.

இண்டஸ்ட்ரியில ரவி ரொம்ப தனித்துவமான ஆள். தேவையில்லாம எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். தனக்கு வாய்ப்பு வேணும் அப்படிங்கிறதுக்காக சுயமரியாதையை துறந்து வளையும் புத்தியெல்லாம் கிடையாது அவருக்கு.

அப்பேர்ப்பட்ட ரவி ஆன் தி வேயில் ஷங்கரை கலாய்ச்சது தனி கெத்துதான்.” என்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்த தனுஷ் - அதகளமாக ஆரம்பமான D55
சோழனின் செயலால் மனம் மாறும் நிலா... பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சேரன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்