பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை ரெஜினா...!

 
Published : Jan 26, 2018, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை ரெஜினா...!

சுருக்கம்

rejinacasandra fall in love with actor nararohith

ரெஜினா அறிமுகம்:

'கண்டநாள் முதல்' படத்தில் நடிகை ரெஜினா அறிமுகமாகி இருந்தாலும் அவரை கதாநாயகியாக அனைவர் மத்தியிலும் கொண்டுப்போய் சேர்த்தது சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படம் தான். இந்த படத்தையடுத்து ரெஜினாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கை கொடுத்த தெலுங்கு:

தமிழ் படங்களில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையுலகத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அங்கு இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தேடி சென்ற தமிழ் வாய்ப்பு:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இவர் ஆன பின்னர் இவருக்கு, தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் வலை விரித்தனர். வரும் வாய்ப்புகளை வேண்டாம் என சொல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்தெடுத்து நடிக்க துவங்கினார் ரெஜினா.

தமிழில் வெற்றி:

இவர் தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த 'சரவணன் இருக்க பயமேன்', 'மாநகரம்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள இவர், தமிழை விட தெலுங்கு மொழி படங்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

காதல்:

முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தும் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் நர ரோஹித்தை இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

மறுப்பு;

இந்த காதல் குறித்து பேசியுள்ள நடிகை ரெஜினா இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார். நடிகர் நர ரோஹித்தும் இந்த காதல் கிசுகிசுவை மறுத்துள்ளார்.

ரசிகர்கள் மைன்ட் வாய்ஸ்:

தொடர்ந்து காதல் வலையில் சிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் காதலை முதலில் மறுப்பதும், பின் திருமணம் செய்துகொள்வதும் பல வருடமாக அரங்கேறி வரும் செயல். இதோபோல் தான் ரெஜினாவின் வாழ்விலும் நடக்குமா.? இல்லையா..? பொறுத்திருந்து பார்ப்போம்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!