ஜெயம் ரவியின் Brother பட ஷூட்டிங்.. கிளாசிக் பாடலுக்கு கூலாக டான்ஸ் ஆடிய கோலிவுட் நாயகிகள் - வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Dec 01, 2023, 01:51 PM IST
ஜெயம் ரவியின் Brother பட ஷூட்டிங்.. கிளாசிக் பாடலுக்கு கூலாக டான்ஸ் ஆடிய கோலிவுட் நாயகிகள் - வைரல் வீடியோ!

சுருக்கம்

Jayam Ravi Brother Movie : பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்துவரும் பிரதர் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், நடிகர் ஜெயம் ரவி மீது இருந்த எதிர்பார்ப்பை வேறொரு லெவலுக்கு கொண்டுசென்றது என்றே கூறலாம். ஆனால் அவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார் அவர். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பிரதர் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகின்றார்.

Tamilselvan Marriage: காதலியை கரம் பிடித்த சன் டிவி சீரியல் நடிகர் தமிழ் செல்வன்! குவியும் வாழ்த்து!

மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை பூமிகா மற்றும் மூத்த தமிழ் நடிகைகள் சீதா மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அதில் நடித்துவரும் நான்கு முக்கிய நடிகைகளும் மிகவும் பிரபலமான ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2024ம் ஆண்டு, சைரன், பிரதர், கமல்ஹாசனின் Thug Life, ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை என்று பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. எதிர்வரும் ஆண்டு நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?