நயன்தாரா - ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By manimegalai a  |  First Published Jun 7, 2023, 7:28 PM IST

நயன்தாரா - ஜெயம் ரவி இருவரும், இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் வெளியான, 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இரண்டாம் பாகம் 350 வரை மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. எனினும் இப்படத்திற்கு செலவு செய்த தொகையை முதல் பாகத்திலேயே படக்குழு வசூலித்து விட்ட நிலையில், இரண்டாம் பாகத்தின் வசூல் அனைத்துமே இப்படத்தின் லாபமாகவே பார்க்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

யாஷிகாவுடன் காதல்? கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்ததன் ரகசியம் பற்றி உண்மையை உடைத்த நடிகர் ரிச்சர்ட்!

'பொன்னியின் செல்வன் 2', படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்திருந்தவர் ஜெயம் ரவி. இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர், ஜெயம் ரவி - நயன்தாரா இருவரும், இரண்டாவது முறையாக இணைந்து, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் இறைவன். தனி ஒருவன் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் அகமது இயக்கி உள்ளார். ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் உருவாகும் இறைவன் படத்திற்கு மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்... படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சாலை ஓரத்தில் உடை மாற்றிய மீனா! மேடையில் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்! ஆச்சர்யமூட்டும் தகவல்!

Custody OTT Release Date: வெங்கட் பிரபு இயக்கிய 'கஸ்டடி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதான் படி இப்படம், "ஆகஸ்ட் 25 முதல் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது படக்குழு. இறைவன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை, நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

will surprise you with the incredible theatrical experience across 4 languages from August 25th !!! … pic.twitter.com/8wemronajr

— Jayam Ravi (@actor_jayamravi)

 

click me!