
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மலேசியாவில் கலை நிகழ்சிகளை நடத்தினர். இந்த கலை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டு இளம் நடிகர்களை உற்சாகப்படுத்தினர்.
மிக பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், இளம் நடிகர்கள் தனி தனி அணிகளாகப் பிரிந்து, கிரிக்கெட், கால் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும், நடிகைகள் பலர் நடனங்கள் ஆடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த விழாவிற்காக சென்ற நடிகர் ஜெயம் ரவிக்கு அளவிற்கு அதிகமாக காய்ச்சல் இருந்ததால், அவர் இந்த விழாவில் பங்கு பெறாமல் அங்கு உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே போல இந்த நிகழ்ச்சியில் கால் பந்து விளையாட்டில் கோல் அடிக்கும் போது நடிகர் ஆரி கீழே விழுந்து அவரது முட்டி மற்றும் முழங் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவரும் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சற்றே சோகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.