
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே,ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள படம் பத்மாவதி. சரித்திர பின்னணியை கொண்ட இப்படத்தில் தீபிகா, பத்மாவதி ராணியாக நடிக்கிறார். பத்மாவதியின் கணவனாக மஹர்வால் ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், கொடூர வில்லனாக அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்தில், தீபிகாவின் காதலர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் ராஜபுத்திர வம்சத்தினரை கேவலப்படுத்துவதாக கூறி ஸ்ரீராஜ்புத் கர்ன சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.மேலும், இப்படத்தை திரையிடக் கூடாதென்றும், தடை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டன. சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டியது போல் நாங்கள் தீபிகாவின் மூக்கை வெட்டுவோம் என ஸ்ரீராஜபுத் கர்ன சேனா அமைப்பின் ராஜஸ்தான் தலைவர் மிரட்டல் விடுத்தார். இது ஒருபுறமிருக்க சத்ரிய சமோஜ் எனும் அமைப்பு தீபிகா உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்மாவதி விவகாரத்தால் தீபிகாவிற்கு கொலை மிரட்டல்கள் வந்ததால், அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
எனவே டிசம்பர் 1ம் தேதி ரிலீசாக வேண்டிய படம் இத்தனை இடையூறுகளால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எல்லா பிரச்சனைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் பல தடைகளை தாண்டி ஒரு வழியாக பத்மாவதி திரைப்படம் வருகிற 25ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அன்றைய தினமே 2.0 ரஜினியின் வில்லனான அக்ஷய் குமாரின் பேட் மேன் திரைப்படமும் வர இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.