
இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, நடித்துள்ள திரைப்படம் 'பூமி'. தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் ஜெயம் ரவி, இந்த படத்தின் ட்ரைலரிலேயே சும்மா மாஸ் காட்டியுள்ளார். படத்தில் வரும் வசனங்களும், விவசாயத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படத்தில் முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதிஅகர்வால் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘பூமி’ திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஞ்ஞானியான ஜெயம் ரவி, தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்து விவசாயத்தை கையில் எடுக்கும் போது... விவசாயிகளுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி அதற்காக குரல் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளித்து, பூமியின் ஆதாரமான, விவசாயத்தை காப்பாற்றுகிறார் என்பதை பரபரக்கும் வசனங்களுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கார்ப்பரேட் வில்லன், காதல், அம்மா செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களுடன் 'பூமி' உருவாகியுள்ளது என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. விஞ்ஞானியாக இருந்தாலும் பூமியை காப்பாற்ற விவசாயியால் மட்டுமே முடியும் என்கிற கருத்தை முன்னிறுத்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.
பூமி படத்தின் ட்ரைலர் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.