ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்! பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கிறாரா இயக்குனர்?

By Asianet TamilFirst Published Jan 7, 2019, 1:35 PM IST
Highlights

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி அயர்ன் லேடி’ பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘தி அயர்ன் லேடி’ பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திரைப்படத்தை எடுக்கப் பலரும் ஆர்வம் காட்டிவருகிறார்கள். இதில் இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கப்போவதாக அறிவித்த ஜெயலலிதா பற்றி ‘தி அயர்ன் லேடி’ என்ற படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

அதற்குக் காரணம், நித்யா மேனனின் படப் போஸ்டர். ஜெயலலிதா 35 - 40 வயதில் இருந்த தோற்றத்தில் அப்படியே பொருந்தியிருந்தார் நித்யா மேனன். ஜெயலலிதா பாத்திரத்துக்கு நித்யா மேனனே சரியானவர் என்று சொல்லுமளவுக்கு பலரையும் அந்த போஸ்டர் ஈர்த்திருந்தது. அந்தப் பட போஸ்டருக்கு பிறகு படம் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24 அன்று படப்பிடிப்பு தொடங்கப்போவதாக இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்திருக்கிறார்.  

இதுபற்றி பிரியதர்ஷினி கூறுகையில், “ஜெயலலிதாவின் போஸ்டர் மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன். அந்த போஸ்டரைப் பார்த்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். நித்யா மேனன் ஜெயலலிதா போலவே இருக்கிறார் என்று பாராட்டியிருந்தார்கள். அது படத்தை எடுக்க எனக்கு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது திரைக்கதை அமைப்பதற்கான பணிகளில் பிரியதர்ஷினி ஈடுபட்டிருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையேயான நட்பு பற்றி அறிவதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்கவும் பிரியதர்ஷினி திட்டமிட்டிருக்கிறார். ஆறு மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் உத்தேசித்துள்ளார் பிரியதர்ஷினி. 2020-ம் ஆண்டில் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார் பிரியதர்ஷினி.  


 

click me!