நடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து கற்பழித்த பிரபல தயாரிப்பாளர்...

Published : Jan 07, 2019, 01:07 PM IST
நடிகையை அபார்ட்மெண்டுக்கு வரவழைத்து கற்பழித்த பிரபல தயாரிப்பாளர்...

சுருக்கம்

தயாரிப்பாளரின் பேச்சை நம்பி அந்த பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்ரிகடவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு  நடிகையின் விருப்பத்தை மீறி தயாரிப்பாளர் அத்துமீறியிருக்கிறார்.


கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப்பை வைத்து ’வெல்கம் டு செண்ட்ரல் ஜெயில்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வைஷாக் ராஜன் அதே கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ளார்.

இச்செய்தியை உறுதி செய்த எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

மாடல் அழகியும், வளர்ந்து வரும் நடிகையுமான  அந்த இளம் பெண்ணுக்கு   தனது படத்தில் முக்கிய கேரக்டர் இருப்பதாகவும் அது குறித்து டிஸ்கஸ் பண்ண தனது அபார்ட்மெண்ட்டுக்கு வரும்படியும்  தயாரிப்பாளர் வைஷக் ராஜன் அழைத்திருக்கிறார் . தயாரிப்பாளரின் பேச்சை நம்பி அந்த பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்ரிகடவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு  நடிகையின் விருப்பத்தை மீறி தயாரிப்பாளர் அத்துமீறியிருக்கிறார்.

பின்னர் அவரிடமிருந்து தப்பி காவல் நிலையம் ஓடிய அந்த நடிகை தனது அபார்ட்மெண்டில்  வைத்து வைஷாக் ராஜன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது செக்‌ஷன் 376ன் கீழ் வழக்கு பதிவு செய்ய்ப்பட்டுள்ளது.

வைஷக் ராஜன் தனது வைஷாகி புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் இதுவரை ‘பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார்(2012), வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்(2016), சங்க்ஸ்(2017), ரோல் மாடல்ஸ்(2017) ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ‘ஜானி ஜானி யெஸ் பாபா’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி