கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை!

Published : Aug 10, 2019, 07:33 PM IST
கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த  பாலிவுட் நடிகை!

சுருக்கம்

நேற்று அறிவிக்கப்பட்ட 66வது தேசிய விருதுகளில் மூன்று தேசிய விருதுகளை, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த, 'மகாநடி' திரைப்படம் தட்டி சென்றது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த, நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.  

நேற்று அறிவிக்கப்பட்ட 66வது தேசிய விருதுகளில் மூன்று தேசிய விருதுகளை, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த, 'மகாநடி' திரைப்படம் தட்டி சென்றது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த, நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த கதாநாயகிக்கான தேசிய விருது, அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷுக்கு இந்த விருது கிடைத்ததை தொடர்ந்து, ரசிகர்கள், மற்றும் பல பிரபலங்களும் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் வரை கீர்த்திக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் தற்போது, கீர்த்திக்கு பிரபல நடிகையும், பிரபல தயாரிப்பாளர், போனி கபூரின் மகளுமான,  ஜான்வி, தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட கீர்த்தி மும்பைக்கு சென்ற போது, ஜான்வியுடம் பார்ட்டிகளில், கலந்து கொண்டு அசத்தினார்.

இந்த நிலையில் கீர்த்திசுரேஷ் தற்போது போனிகபூர் தயாரித்து வரும் பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இது பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரர் சயிது அப்துல்ரஹிம் என்பவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அப்துல்ரஹிம் கேரக்டரில் அஜய் தேவ்கானும், அவருடைய மனைவியாக கீர்த்திசுரேஷும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!
சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது