
நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய யாஷிகா மற்றும் மஹத் ஆகியோர் உள்ளே வந்து, அதிர்ச்சி கொடுத்தனர்.
மேலும், தர்ஷனுக்கு ராஜா வேடம் போட்டு, அவருக்கு மற்ற போட்டியாளர்களை சேவை செய்ய வைத்ததோடு, ஷெரின் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுத வைத்து அடுத்து என்ன நடக்கும் என மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இருந்தது நிகழ்ச்சி.
இதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருவர் வந்துள்ளனர். இது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. புதிதாக இருவர் வருவதை அறிந்து யார் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, சாண்டி பிக்பாஸ் கதவின் அருகிலேயே படுத்து கிடக்கிறார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டல் வின்னர், ரித்விக்கா மற்றும் நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே வந்த ஜனனி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மிகவும் தனி தன்மையோடு இருக்கீறீர்கள் என கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து பேசும் ஜனனி ஐயர், தர்ஷம் ஆரம்பத்தில் இருந்து ஓரே கோலை நோக்கி செல்கிறார் என புகழ்கிறார். அதை தொடர்ந்து, கவினை பார்த்து கலாய்க்கும் விதமாக 'அதிகமா அடி நான் தான் வாங்கி இருக்க அதனால கப்பு எனக்கு தான் என கூறுகிறார். இதையடுத்து, உங்க கதையில ஹீரோவும் நீங்க தான் வில்லனும் நீங்கள் தான் என பேசும் காட்சி வெளியாகியுள்ளது.
அதன் ப்ரோமோ இதே...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.