அஜித், விஜய் கொடுத்த மாஸ் – புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் ஹெச் வினோத்!

Published : Jun 26, 2025, 08:48 PM IST
H Vinoth

சுருக்கம்

H Vinoth Starts Production House : இயக்குநர் ஹெச் வினோத் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

H Vinoth Starts Production House : வேலூரில் பிறந்து வளர்ந்தவர் இயக்குநர் ஹெச் வினோத். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படும் இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் விஜய்யின் அரசியல் லாபத்திற்கான படமாக கூட இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜன நாயகன்

இதையொட்டி ஜன நாயகன் படத்தை விஜய் பயன்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குநர் ஹெச் வினோத். இந்தப் படத்தில் நட்டி என்ற நடராஜ், இஷாரா நாயர், இளவரசு, பொன்வண்ணன், மதுசூதனன் ராவ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். பிளாக் காமெடி கதையை மையபடுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்தது.

தீரன் அதிகாரம் ஒன்று

இந்தப் படம் அவரை சிறந்த இயக்குநராக அடையாளம் காட்டியது. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை கொடுத்தார். போலீஸ் த்ரில்லர் கதையை மையபட்டுத்திய இந்தப் படத்தில் கார்த்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். இந்தப் படமும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

நேர்கொண்ட பார்வை

இந்தப் படத்தைத் தொடர்ந்துதான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் இயக்கிய படம் தான் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க அஜித்தை வேறுபட்ட கோணத்தில் இந்தப் படம் காட்டியது. 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் டாப்ஸி, கிர்த்தி குல்கரி, அங்கத் பேடி, பியூஷ் மிஷ்ரா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலில் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாஜலம், வித்யா பாலன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படமும் ரூ.180 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்திருந்தது. இந்தப் படம் ஹிட் கொடுக்கவே அஜித் மீண்டும் வினோத்தை நம்பி அடுத்த வாய்ப்பை கொடுத்தார். ஆம், வலிமை படத்தை இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே ஹாட்ரிக் ஹிட்டுக்காக அஜித்தின் துணிவு படத்தையும் இயக்கினார். இப்படி தான் இயக்கிய 5 படங்களில் 3 படங்களை அஜித்தை வைத்து மட்டும் இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.

அஜித்தைத் தொடர்ந்து முதல் முறையாக விஜய் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் தான் ஜன நாயகன். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியா மணி, மோனிஷா பிளெஷி, வரலட்சுமி சரத்குமார் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஹெச் வினோத்:

இந்த நிலையில் தான் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 11 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகு மாஸ் இயக்குநரான ஹெச் வினோத் அடுத்து புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருக்கிறார். புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஹெ்ச் வினோத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இயக்குநர் பிரம்மா புதிய படம் இயக்க இருப்பதாகவும், திரைக்கதைக்கான பணிகளை வினோத் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பா ரஞ்சித், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பிரபலங்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமாக படங்களை தயாரித்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் இப்போது வினோத் இறங்கியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!