ஒரே வருடத்தில் 14 படங்களுமே ஹிட் கொடுத்த நடிப்பு ஜாம்பவான் யார் தெரியுமா?

Published : Jun 26, 2025, 07:05 PM IST
mic mohan

சுருக்கம்

Mic Mohan Hits 14 Movies in a Single Year : ஒரே வருடத்தில் தான் நடித்த 14 படங்களையும் ஹிட் கொடுத்த நடிகர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Mic Mohan Hits 14 Movies in a Single Year : மைக் மோகன் என்று அழைக்கப்படும் நடிகர் மோகன் 80ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவராக இருந்தார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு போட்டியாக சிம்ம சொப்பனமாக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்டார். இவரது தொடர் வெற்றியை பார்த்து மிரண்ட அப்போதைய உச்ச நட்சத்திரங்கள் தூக்கத்தை தொலைத்தார்கள். எனவே தான் அவரை வெள்ளி விழா நாயகன் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கொண்டாடினார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் பார்த்தனர். மோகன் ராசியான நடிகர் மட்டுமில்லை, படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவாராம். அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடிகள் எதுவும் செய்யமாட்டார் என்பதால் தயாரிப்பாளர்கள் மதிப்பில் மோகனுக்கு அன்பும், பாசம் நிறைந்திருந்தது. இவர் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும், படமும் போர் அடிக்காது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது.

சினிமாவில் அறிமுகமான மோகன்:

கடந்த 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ராவ். இவரது தந்தை பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். பெங்களூருவிலேயே படிப்பை முடித்த மோகனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே அங்கிருந்த நாடக குழுக்களில் சேர்ந்து நடித்து வந்தார். அப்படி ஒருமுறை பெங்களூரு சென்ற பிரபல ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் கண்களில் பட்ட மோகன், அவரின் இயல்பான நடிப்பும் தோற்றமும் பாலுமகேந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே, தான் இயக்கிய முதல் படமான கோகிலாவில் மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார் பாலு மகேந்திரா. கமல் ஹீரோவாகவும், ஷோபனா ஹீரோயினாகவும் நடித்திருந்த இப்படத்தில் மோகன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மூடுபனி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மோகன். இந்த வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தது பாலு மகேந்திரா தான். மூடுபனி படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்தார் மோகன். இந்த படத்தில் நான்கு காட்சிகளில் மட்டுமே வந்து போவார் மோகன்.

இதையடுத்து இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் சுஹாசினியின் காதலராக நடித்தார். சுஹாசினியின் அண்ணனாக சரத்பாபு, கணவராக பிரதாப் போத்தனும் நடித்தனர். இதில் மோகனுக்கு சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் கார் மெக்கானிக்காக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் மோகன். மூடுபனியும், நெஞ்சத்தை கிள்ளாதேவும் 1980-ம் ஆண்டு அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

1981-ம் ஆண்டு வெளிவந்த கிளிஞ்சல்கள் திரைப்படம் தான் மோகனுக்கு ஒரு கதாநாயகனுக்குரிய வெற்றிப்பாதையை அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஒரு வழக்கமான ஹீரோக்களுக்கான பந்தா இல்லாமல், இயல்பான தோற்றத்துடன் நடித்த மோகனை, அன்றைய தலைமுறை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக ரசிகைகளை கொண்ட நடிகர் என்றால் அது மோகன் தான். தனக்கு வரும் கணவர் மோகனை போல் இருக்க வேண்டும் என்று கனவு கோட்டை கட்டிய பெண்கள் அப்போது ஏராளம்.

மோகனின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு இயல்பான கதையை சுவாரஸ்யமாக சொல்லும் இயக்குனர்களும் இளையராஜாவின் இசையும் அமைந்துவிட்டால் அது நிச்சயம் வெற்றிபெறும் என்கிற நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. அப்படியான படங்கள் மோகனுக்கு அமைந்தன. அதுமட்டுமா அவரது பெரும்பாலான படங்களில் எப்போதும் மைக்கை பிடித்து பாடிக் கொண்டிருப்பதால் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். மோகன் நடிப்பில் வெளியாகி மிக பிரம்மாண்ட வெற்றிபெற்ற பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது இளையராஜா தான்.

பயணங்கள் முடிவதில்லை படத்தில் தான் முதன்முறையாக மோகன் மைக் பிடித்து பாடி இருப்பார். இதனால் அவரை மைக் மோகன் என அழைக்க பிள்ளையார் சுழி போட்டது இந்த படம் தான். படத்தில் மோகன் மைக்கோடு தோன்றினால் படம் சூப்பர் ஹிட்டாகும் என்கிற செண்டிமெண்டும் அப்போது இருந்துள்ளது. அவர் கதாநாயகனாக உச்சத்தில் இருந்தபோதே பிளே பாய், வில்லன் போன்ற கதாபாத்திரத்திலும் அவர் நடிக்க தயங்கியதில்லை.

சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த மோகன் நாளடைவில் 10க்கும் அதிகமான படங்களில் நடித்தார். இவ்வளவு ஏன் ஒரேவருடத்தில் 14 படங்களில் நடித்து அந்த 14 படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ அது மைக் மோகன் தான். என்னதான் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் யாராலும் 1, 2, 3 படங்களை வேண்டுமென்றால் ஹிட் கொடுக்க முடியும். ஆனால், 14 படங்களையும் அதுவும் வரிசையாக எல்லா படங்களையும் ஹிட் கொடுப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.

ஆனால் அந்த சாதனையை ரொம்பவே ஈஸியா செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா மற்றும் விஜய்யின் கோட் படங்களில் நடித்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!