
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 516ஆவது எபிசோடானது செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகளுடன் தொடங்கியது. இதில், நான் எங்காவது ஓடி போயிடவா என்று செந்தில் கேட்க, அதற்கு அப்படியே போயிடுங்க, வந்துடாதீங்க. பண பிரச்சனை மற்றும் அரசி பிரச்சனை என்று எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சென்றுவிட்டார். மறுபுறம் தன்னிடம் பேச வந்த அரசியிடம் கோமதி தண்ணீரை எடுத்து ஊற்றியுள்ளார்.
தன்னுடைய அம்மாவையும் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது என்று சொல்லிவிட்டார். ஒரு புறம் கதிர் தனது நண்பர்களிடம் ரூ.10 லட்சம் பணத்திற்காக நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், யாரிடமும் கிடைக்கவில்லை. ஒவ்வொரூவரும் ஒவ்வொருவிதமான பதிலை அளித்தனர். மணி 4 ஆகியும் செந்தில் வீட்டிற்கு வரவில்லை. அதற்குள்ளாக பணத்தை வாங்க பாண்டியனின் அக்காவும், மாமாவும் வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் கோமதி செந்திலுக்கு போன் போடவே இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்தார்.
கடைசியில் செந்தில் வீட்டிற்கு வந்தார். எல்லோரும் பணத்தை கேட்டுக் கொண்டே இருக்க, செந்தில் பணம் இல்லை என்று திக்கி திணறி பேசினார். பாண்டியனும், கோமதியும் பதற்றத்துடன் பேசவே, செந்தில் பணம் இல்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். அதற்குள்ளாக மீனா பணம் என்னிடம் இருப்பதாக கூறி ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி இதுவரையில் தெரியவில்லை. எனினும், அந்த பணத்தை வாங்கி தனது அக்காவிடம் கொடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 516ஆவது எபிசோடு முடிந்தது. ஏற்கனவே மீனா ரூ.10 லட்சம் கேட்டு ஆபிஸில் லோனுக்கு முயற்சி செய்தார். ஆனால், அதை பற்றி எந்த எபிசோடிலும் காண்பிக்கவில்லை. ஒருவேளை முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய பணமாக இருக்குமோ அல்லது யாரிடமாவது லஞ்சமாக பெற்ற பணமோ என்று பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.