ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபலங்களுக்கு சம்மன்! நீதிபதி அதிரடி!

 
Published : Nov 17, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபலங்களுக்கு சம்மன்! நீதிபதி அதிரடி!

சுருக்கம்

jallikattu protest

இந்த வருடம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு  நடத்தியே தீர வேண்டும் என்று ஒட்டுமொத்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மக்களும் ஒன்று திரண்டு போராடிய போராட்டம் வரலாறு காணாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

தற்போது இந்தப் போராட்டத்திற்குத் துணையாக நின்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் வழக்கு குறித்து விசாரித்து வந்த நீதிபதி. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இடங்களான சென்னை, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்.

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நீதிபதி, இந்தப் போராட்டம் குறித்து 1951 பேருக்கு பிரமாண பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்தப் போராட்டத்தின் போது பணியில் இருந்த, காவல் துறையினர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான் , ஜீ.வி.பிரகாஷ், நயன்தாரா உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!