அரசியல் கட்சி தொடங்க லேட் ஆகும் !! கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பும் ஆண்டவர்!!!

 
Published : Nov 17, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
அரசியல் கட்சி தொடங்க லேட் ஆகும் !! கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பும் ஆண்டவர்!!!

சுருக்கம்

kamal send back money to his fans

புதிய கட்சி தொடங்குவதற்காக ரசிகர்களிடம் இருந்து தனக்கு பணம் வரத் தொடங்கிவிட்டது என்றும், தற்போது அதனை வாங்குவது சட்டவிரோதம்  என்பதால் அந்த பணத்தைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறேன் என்று நடகர் கமவ்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம்  பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதகாவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி  சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் பேசிய கமல், தான் அரசியலுக்கு வருவது உறுதி, என்றும் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படும் என்று கூறுகிறார்கள். ரசிகர்கள் நினைத்தால் அந்த பணத்தை தந்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதனால்  அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தனக்கு பயமில்லை என்றும், கட்சி தொடங்க ரசிகர்களிடம் பெறப்படும் பணத்திற்காக 'மைய்யம் விசில்' செயலி பயன்படுத்தப்படும்" என்று  கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள  ஆனந்த விகடன் இதழில் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்ற நான் கூறியதற்கு பதிலாக ரசிகர்கள் கொடுப்பார்கள் என்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். இது போன்ற குழப்பங்களுக்கு டி விளக்கம் சொல்வதிலேயே என்னை தாமதப்படுத்துகிறார்கள் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

தனது கோரிக்கையை ஏற்று, தற்போது தனக்கு கடிதங்களும், பணமும் வரத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இப்போது அதனை வாங்கினால் சட்டவிரோதம் என்றும் வாங்கி சும்மாவும் வைத்திருக்கக் கூடாது என்பதால் அதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் திருப்பியனுப்பிக் கொண்டிருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

இதனால் பணம் வாங்க மாட்டேன் என்று அர்த்தம் கிடையாது, சரியான கட்டமைப்பு இல்லாமல் பணத்தை தொடக் கூடாது. இந்த பணம் என்னுடையது என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், அதற்குள் பணம் செலவாகிவிட்டால் உங்களிடமிருந்து பெறுவதற்கு எனக்கு பாக்கியமில்லை என்று நினைத்துக் கொள்கிறேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!