அனிருத்துக்கு காசு மட்டும் அல்ல... 3 புது காரை நிறுத்தி ஆசை பட்டதை தேர்வு செய்ய சொன்ன கலாநிதி! வைரல் வீடியோ

By manimegalai a  |  First Published Sep 4, 2023, 10:01 PM IST

அனிருத்துக்கு செக் மட்டுமே கொடுத்து விட்டு... கார் கொடுக்கவில்லை என நினைத்த நிலையில், 3 சொகுசு கார்களை வரிசையாக நிறுத்து எந்த கார் வேணுமோ எடுத்துக்கோங்க என ஆப்ஷன் கொடுத்துள்ளார் கலாநிதி மாறன். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


தலைவரின் மாஸ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதி வெளியான  ’ஜெயிலர்’ திரைப்படம், தமிழ் திரையுலகில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து, இதுவரை கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

எனவே போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு இந்த படம் லாபம் கொடுத்துள்ளதால், சன் பிச்சர்ஸ் நிறுவனம் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளது. படத்தின் லாபத்தில், ரஜினிகாந்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபத்தை ஷேர்ராக கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அன்பு பரிசாக BMW x7 என்கிற லேட்டஸ்ட் மாடல் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

Tap to resize

Latest Videos

பிரமாண்டமாக நடந்த நாஞ்சில் விஜயன் ரிசெப்ஷன்! வாழ்த்து கூற கூடிய விஜய் டிவி பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

ரஜினியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சனுக்கும், சுமார் 2 கோடி மதிப்புள்ள போர்ச் கார் மற்றும் செக்கை பரிசாக அளித்தார். அனிருத்துக்கு மட்டும் இதுவரை எந்த ஒரு பரிசும் கலாநிதி கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று செக் கொடுத்த புகைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் கொடுத்தது போலவே... மூன்று சொகுசு கார்களை நிறுத்து, உங்களுக்கு எது பிடிக்கிறதோ எடுத்து கொள்ளுங்கள் என, ஆப்ஷன் கொடுத்து தேர்வு செய்ய கூறியுள்ளார். அனிருத்.... நெல்சனை போல போர்ச் காரை தான் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நான் ஒரு பேச்சுலர்... ஆனால் எனக்கு ஒரு மகள் இருக்கா! முதல் முறையாக அறிமுகம் செய்து கண்ணீர் விட்ட விஷால்!

கலாநிதி மாறன், கிப்ட் செட்டில்மென்ட் இதோடு நின்று விடுமா? அல்லது இந்த படத்திற்காக உழைத்த, உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

To celebrate the humongous Blockbuster , Mr. Kalanithi Maran presented the key of a brand new Porsche car to pic.twitter.com/lbkiRrqv7B

— Sun Pictures (@sunpictures)

 

click me!