அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published : Sep 04, 2023, 08:30 PM IST
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சுருக்கம்

'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வந்த, 'தீயவர் குலைகள் நடுங்க' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  

'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'தீயவர் குலைகள் நடுங்க' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இதில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். 

Jailer Anirudh: அனிருத்துக்கு அல்வா? எகிறிய விமர்சனம்... கப்பு சிப்புனு செக் கொடுத்து ஆப் செய்த கலாநிதி மாறன்!

படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இன்வெஸ்டிகேசன் ஆக்சன்  திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். 

நான் ஒரு பேச்சுலர்... ஆனால் எனக்கு ஒரு மகள் இருக்கா! முதல் முறையாக அறிமுகம் செய்து கண்ணீர் விட்ட விஷால்!

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!